அம்மாவுக்கு ஒரு செய்தி!


நெஞ்சின் வலிகள்!

அம்மாவுக்கு ஒரு செய்தி!
ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டவர்கள்
வீதிக்கு வீதி
முச்சந்திக்கு முச்சந்தி
ஒரு டாஸ்மாக் ஆரம்பித்தார்கள்!

தங்கம்
சவரன் மூவாயிரம்
விற்ற இடத்தில்                                                                                              
கிராம்  மூவாயிரம் என்று                                 
ஏற்றி வைத்தார்கள்!

ஆயிரம் ரூபாய் வாடகையில்                     
ஆறு பேர் தங்கிய சென்னை வீட்டில் 
இன்று
ஆறாயிரம் ரூபாய் வாடகையில்               
ஆறு பேர் கூட நிம்மதியாய்
உட்கார முடியவில்லை!

மாசத்துக்கு மாசம்                                      
மக்கள் தொகை
ஏறுதோ இல்லையோ
இவர்களுடைய
பெட்ரோல் டீசல்                                            
விலை ஏறிடும்!..

இலவச டி.வி என்று
தன்னுடைய
குடும்ப கேபிள் டி.வி
வருமானத்தை
ஏற்றிக்கொண்டார்கள்!

சீரியல் பார்த்தே
சீரழிந்த பல குடும்பங்கள்!
எந்த குழந்தைக்கு
அன்பும் பாசமும் தெரிகிறது!

"ஏய்!.. ஏய்!.." என்று
அடித்தொண்டையில் கத்தும்
ஒல்லிப்பிச்சான் ஹீரோவின் குரலும்!
வில்லனின் எதிர் குரலும் தான்!

நம் வீட்டு
வருங்காலத் தூண்களின்
படிப்பும் எதிகாலமும்..
அம்மா
உங்கள் கையில்!

அம்மா..
எங்களுக்கு
இலவசம் எதுவும் வேண்டாம்!

உழைக்க
வலுவான உடலும்
கையும் மனமும்
இருக்கு!

உழைப்பதற்கான வாய்ப்பை மட்டும்..
தமிழ் நாட்டு மக்களான
எங்களுக்கு வழங்கி ..
எங்கள் வாழ்வில்
விளக்கு ஏற்றுங்கள்!..

உங்கள் நல்லாட்சி தொடரட்டும்!

 ----------------தமிழ் நாட்டு குடிமக்கள்! 
 
Links..1000 jobs world visit here....
ADESNSE  சம்பாதிக்க click here...
பொன்மொழிகள் பார்க்க ..கிளிக் செய்
மனநிம்மதி வேண்டுமா?..click here..
BPO jobs india today!..visit here..

sponsored useful job links...

A  .  B  .  D  .  E  .  F  .  H  .  I  .  J  .  K  .     .  M  .  O  .  P  .  Q  .  R  .  S  .  T  .  V  .  W  .  X  .  Y  .  Z