வைரஸ் போன்று நிஜத்தில் வாழும் சில விருமாண்டி சந்தானங்களுக்கு,

வைரஸ் போன்று நிஜத்தில் வாழும்
சில விருமாண்டி சந்தானங்களுக்கு,

நண்பன் படத்தை பார்த்த யாரும் 'சட்டென்று' வைரஸ் என்ற அந்த விருமாண்டி சந்தானம் கேரக்டரை மறக்க முடியாது..அப்படி ஒரு யதார்த்தமான கேரக்டர்.. அந்த கேரக்டர் பண்ணும் டார்ச்சரில் முதல் பாதியில் ஒரு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறான்.. அடுத்த பாதியில் இன்னொரு மாணவன்.. மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கிறான்..இன்று நிஜத்தில் இது போன்ற வைரஸ்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களை துன்புறுத்திக் கொண்டு தான் கொண்டிருக்கிறார்கள்..

இதற்கு சில உதாரணம்..இன்று செய்தித்தாளை பிரித்தால்,ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை!.. மாணவி தூக்கு! இது தான் தலைப்பு செய்தி..

ஆசிரியர் என்பவர் யார்?.. அன்பும் கருணையுமாய், அறிவுக்கண் திறக்கும் வாழும் தெய்வம்.!
மாதா , பிதா, குரு, தெய்வம் என்று பெற்றவர்களுக்கு அடுத்து, தெய்வத்திற்கு முன், மதிப்பு கொடுத்து இருக்கிறார்கள்.ஏன்.. என்றால்.. தாய் , தந்தை உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.. ஆனால் குரு என்பவன் மனிதனுக்கு அறிவு கண்ணையே திறக்க போகிறவர்..அதனால் தான் குருவிற்கு பிறகே தெய்வம் என்று சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..  .

ஆனால் .. அப்படிப்பட்ட குரு தான்.. இன்று பள்ளிகளில் ஆசிரியராகவும்.. கல்லூரிகளில் பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால்.. அவர்க்ள் இன்று என்ன செய்கிறார்கள்..அன்பும் கருணையும் காட்ட வேண்டிய இடத்தில் அரக்கத்தனமாய் கொடூர மனம் கொண்ட கோட்டான்களாக 'மாணவர்களிடம்' அனலைக் கொட்டி கருக வைக்கிறார்கள்.அன்பாய், ஆதரவாய் மாணவன் செய்யும் தப்பை சுட்டிக் காட்டினாலே போதுமானது.. அதை விட்டு விட்டு, 'நீ அதை செய்தாயா? இதை செய்தாயா?' என்று விசாரணை என்ற பெயரில் 'உனக்கு டி.சி கொடுத்து விடுவேன்!.. உன்னை பெயில் செய்து விடுவேன்! 'என்று மிரட்டுவது.. பிளாக்மெயில் செய்யும் பொது.. அந்த மாணவன் மனம் என்ன பாடு படும்.. தூக்கு கயிற்றையும், விச பாட்டிலையும் தான் தேடும்.
ஏன்.. இன்று செய்வமாய் நடந்து கொள்ள வேண்டிய ஆசிரியர்கள் குறைந்த பட்சம் மனிதனாய்க் கூட நடந்து கொள்வது கிடையாது..  .ஏன்.. என்றால்.. இன்று மனிதம் செத்து விட்டது..அதிகம் படித்த ஆசிரிய பெருமக்களுக்கு.. கர்வத்தினால்..நியாயம் புரிவதில்லை.. எல்லா ஆசிரியர்களும் வைரஸ் போல இல்லை என்றாலும்.. வைரஸ் போல இருக்கும் ஆசிரிய சில பெருமககள் இனி.. மாணவனுக்கான ஆசிரியர்களாக மாறி மனிதனேயத்துடன் நடங்கள்..
வாழ்க..மனிதம்..
ஒழிக வைரஸ் போன்ற விருமாண்டி சந்தானங்கள்