mullai periyaaru

முல்லை பெரியார்

முல்லைபெரியார் .. தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு இணைப்பை 
உருவாக்கிய சொல் இன்று அதே சொல் தமிழர்களுக்கும்   மலையாளிகளுக்கும் ஒரு பிரிவை உண்டு பண்ணி .. தமிழக கேரளா எல்லையில் மக்கள் போராடும் கொடூர நிலைமைக்குக் காரணம் நம்மூர் அரசியல்வாதிகளா.. கேரளா அரசியல்வாதிகளா?..


தென் ஆப்பிரிக்காவில் காந்தி!

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான போரில் காந்தியடிகளுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது! கடுங்காவல் தண்டனை!

சிறையில்  காந்தி செருப்பு தைத்தார்!

முதல் தயாரிப்பான  செருப்பே அம்சமாய் இருந்தது!

அச்செருப்பை யாருக்காவது அன்பளிப்பாக கொடுக்க காந்தி ஆசைப்பட்டார்!

அவர் நினைவுக்கு வந்த முதல நபர் ஸ்மட்ஸ்..

அவர் காந்தியடிகளை சிறையில் அடைத்த ஆளுனர்! 

சிறையில் இருந்து விடுதலையானதும் காந்தி,   ஸ்மட்ஸ்யை சந்தித்து தாம் தைத்த காலணிகளை அன்பளிப்பாக வழங்கினார்!

காந்தியடிகள் இறந்த போது உலகமே இரங்கல் செய்தி அனுப்பியது!

ஸ்மட்ஸ் தனது இரங்கல் செய்தியில் "காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணிகளை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார்! அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்!.. என் கால்கள் நடுங்கின! என்னால் நிற்க முடியவில்லை! உடனே அதை எடுத்து சென்று
 என் பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன்!" என்று குறிப்பிட்டார்!

அதனால் தான் உலகமே காந்தியை மகாத்மா என்று கொண்டாடுகிறதோ!
*****************************

உங்களுக்கு  மெக்கானிகல் வேலை வேண்டுமா? இங்க பாருங்க!
உங்களுக்கு சிவில் வேலை தேவையா.. click  here!

பொன்மொழிகள் பார்க்க ..கிளிக் செய்
வேலைகள் பலப்பல.. கிளிக் பண்ணுங்க
sponsored useful job links...

A  .  B  .  D  .  E  .  F  .  H  .  I  .  J  .  K  .     .  M  .  O  .  P  .  Q  .  R  .  S  .  T  .  V  .  W  .  X  .  Y  .  Z

நாளிதழில் செய்தி! நாய்கடி ஊசி கண்டிப்பாக  தேவை!
வீட்டில் வளர்த்த குட்டி நாய் கடிதத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிர் உசல்!

சில மாதங்களுக்கு முன் அந்த மாணவன் தெருவில் கிடந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்க தொடக்கி இருக்கிறான்! 

ஒரு நாள் அந்த குட்டி நாய் அந்த மாணவனை விளையாட்டாய் கடித்திருக்கிறது! .. அம்மாணவனும் அலட்சியமாய் யாரிடமும் சொல்லலாமல் 'குட்டி நாய் தானே' என்று இருந்து விட்டான்.. அது தான் இப்பொழுது வினையாகிவிட்டது!

நாய் கடித்தால் ரேபிஸ் என்னும் நோய் தாக்கி விடும்! அந்த நோய் தாக்கினால் மனிதர்கள் நாய் போலவே மாறிவிடுவார்கள்.. நாய் போலவே குரைப்பது..கடிப்பது..நக்குவது.. என்று நடந்து கொள்ளுவார்கள்!.. சில நாட்களில் அவர்கள் நோய் முற்றி இறந்தே போய்விடுவார்கள்! ..

இதே நிலைமைக்கு தான் இப்போது இந்த மாணவன்  ஆகிவிட்டான்!

நாய் கடித்த போதே நாய்கடி ஊசி போட்டிருந்தால், இந்நேரம் இந்த மாணவனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது!     

விவரம் தெரிந்து அம்மாணவன் வீட்டில் அனைவரும் கதறுகின்றனர்.. அம்மாணவனும் தனக்கு என்ன நோய் என்றே தெரியாமல் அழுகின்றான்!..

நமக்கு நெஞ்சை பிழிகிறது!..

மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்ப்பாடு நடக்கிறது.. ஆனால் டாக்டர்கள் இனி அம்மாணவன் பிழைப்பது கடினமே..என்று கையை பிசைகிறார்கள்..

இதெல்லாம் நம்மக்களுக்கு நாய்கடி  பற்றி விழிப்பணர்வு இருந்திருந்தால்..நடந்திருக்காது..

எனவே,..
குட்டி நாயோ பெரிய நாயோ கடித்து விட்டால்.. உடன்..அரசாங்க மருத்துவமனைக்கு சென்று நாய்கடி
 ஊசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்! ..விவரம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்!..

நாய்கடி ஊசி கண்டிப்பாக தேவை!
                        @@@@@@@@@@@@@@@ 

நடிகை வனிதா கைதாகி பின் விடுதலை!

முதல் கணவர் வீட்டு முன் உண்ணாவிரத போராட்டம் !..
மகனை மீட்கும் வரை போராடுவதாக நடிகை வனிதா அறிவிப்பு!

இதென்ன கூத்தா இருக்குப்பா!
கணவன் முன்னாலே நின்னு பேசவே பயப்பட்ட பெண்கள் வாழ்ந்த தமிழ் நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா?
பெற்ற பிள்ளை நல்ல இருக்க வேண்டும் என்று மண் சோறு சாப்பிடற தாய்மார்கள் வாழ்ற  தமிழ் நாட்டில் இப்படியும் பெண்கள் இருப்பார்களா?

உன் குடும்ப பிரச்சனை என்றால் அதை பேசி தீர்த்துக்க! அதை விட்டு புட்டு குழந்தைக
மேல எதுக்கு பிரச்சனை பண்றே!

இதேல்லாம் பார்க்க நல்லவா இருக்கு!

நல்ல (குடும்ப)(குடும்பம் என்றால் என்ன என்று கேட்காதே)பொம்பளை என்றால்  குழந்தை என்ன விரும்புதோ அதை செய்!

நீ தான் உன் விருப்ப படி வாழ்க்கையை வாழறே!.. அப்புறம் ஏன் பிரச்சனை!
    

*********************
நாளிதழில் செய்தி!
மாணவி தந்தையை கத்தியால் குத்தி கொலை!

இது நம்ப முடிகிறதா?..

மாணவியின் தந்தை தினம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து சண்டை போடுவாராம்!

அதனால் பேனா பிடிக்க வேண்டிய கையில் கத்தியை பிடித்திருக்கிறது இந்த மாணவி!

இதெல்லாம் எதனால்.. எல்லாம் குடியினால் தான்..

ADESNSE  சம்பாதிக்க click here...
நாளிதழில் மற்றொரு செய்தி!

தினமும் குடித்திவிட்டு கணவன் வந்ததால் மனைவி  தீக்குளிப்பு!
இது எதனால்? எல்லாம் குடித்து விட்டு வந்ததனால் தான்!
அன்று..
ஆண்கள் நாளும் கிழமையும்  என்றால் குடித்து விட்டு வருவார்கள்!
ஆனால்
இன்று ..
தினமும் டாஸ்மாக் தான்.. கேட்டால் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிக்கிரார்கலாம்!
இதனால் வீட்டில்  உள்ள பெண்களும் குடும்பமும் தான் பாதிக்க படுகிறது!
எனவே குடி வேண்டாம் ஆண்களே!

sponsored useful job links...

A  .  B  .  D  .  E  .  F  .  H  .  I  .  J  .  K  .     .  M  .  O  .  P  .  Q  .  R  .  S  .  T  .  V  .  W  .  X  .  Y  .  Z

அம்மாவுக்கு ஒரு செய்தி!


நெஞ்சின் வலிகள்!

அம்மாவுக்கு ஒரு செய்தி!
ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டவர்கள்
வீதிக்கு வீதி
முச்சந்திக்கு முச்சந்தி
ஒரு டாஸ்மாக் ஆரம்பித்தார்கள்!

தங்கம்
சவரன் மூவாயிரம்
விற்ற இடத்தில்                                                                                              
கிராம்  மூவாயிரம் என்று                                 
ஏற்றி வைத்தார்கள்!

ஆயிரம் ரூபாய் வாடகையில்                     
ஆறு பேர் தங்கிய சென்னை வீட்டில் 
இன்று
ஆறாயிரம் ரூபாய் வாடகையில்               
ஆறு பேர் கூட நிம்மதியாய்
உட்கார முடியவில்லை!

மாசத்துக்கு மாசம்                                      
மக்கள் தொகை
ஏறுதோ இல்லையோ
இவர்களுடைய
பெட்ரோல் டீசல்                                            
விலை ஏறிடும்!..

இலவச டி.வி என்று
தன்னுடைய
குடும்ப கேபிள் டி.வி
வருமானத்தை
ஏற்றிக்கொண்டார்கள்!

சீரியல் பார்த்தே
சீரழிந்த பல குடும்பங்கள்!
எந்த குழந்தைக்கு
அன்பும் பாசமும் தெரிகிறது!

"ஏய்!.. ஏய்!.." என்று
அடித்தொண்டையில் கத்தும்
ஒல்லிப்பிச்சான் ஹீரோவின் குரலும்!
வில்லனின் எதிர் குரலும் தான்!

நம் வீட்டு
வருங்காலத் தூண்களின்
படிப்பும் எதிகாலமும்..
அம்மா
உங்கள் கையில்!

அம்மா..
எங்களுக்கு
இலவசம் எதுவும் வேண்டாம்!

உழைக்க
வலுவான உடலும்
கையும் மனமும்
இருக்கு!

உழைப்பதற்கான வாய்ப்பை மட்டும்..
தமிழ் நாட்டு மக்களான
எங்களுக்கு வழங்கி ..
எங்கள் வாழ்வில்
விளக்கு ஏற்றுங்கள்!..

உங்கள் நல்லாட்சி தொடரட்டும்!

 ----------------தமிழ் நாட்டு குடிமக்கள்! 
 
Links..1000 jobs world visit here....
ADESNSE  சம்பாதிக்க click here...
பொன்மொழிகள் பார்க்க ..கிளிக் செய்
மனநிம்மதி வேண்டுமா?..click here..
BPO jobs india today!..visit here..

sponsored useful job links...

A  .  B  .  D  .  E  .  F  .  H  .  I  .  J  .  K  .     .  M  .  O  .  P  .  Q  .  R  .  S  .  T  .  V  .  W  .  X  .  Y  .  Z